வயிற்றில் இருந்த குழந்தையுடன் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!! மனதை பதறவைக்கும் சம்பவம்..
கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம
கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அரையபுரம் என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி சூர்யா. சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சிலம்பரசன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் சிலம்பரசன் சமீபத்தில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிதாக செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். பிரசவ செலவுக்கே கையில் பணம் இல்லாதபோது இவ்வளவு விலைக்கு புதியதாக போன் வாங்க வேண்டுமா என கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யா கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சூர்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், வயிற்றிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.