வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் தெரியுமா.? தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா அதிரடி பேச்சு.!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கின்றோம் என்று கூறியவர், எங்களது அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தான் இறுதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் தற்போது நலமுடன் உள்ளார். நீங்கள் எல்லாம் அவரை தேர்தல் பிரச்சாரத்தின் போது பார்க்கலாம் என்று தெரிவித்தார்.