#Breaking: வார்த்தையால் விவரிக்க இயலாத சோகம்.. - தஞ்சாவூர் விபத்துக்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!
#Breaking: வார்த்தையால் விவரிக்க இயலாத சோகம்.. - தஞ்சாவூர் விபத்துக்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களிமேடு கிராமத்தில் நடந்த அப்பர் கோவில் தேர் திருவிழாவின் போது, தேரின் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. மேலும், தேரும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தஞ்சாவூருக்கு நேரில் செல்கிறார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம் இழப்பீடும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியுள்ளது வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.