சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது! பொதுமக்கள் அதிர்ச்சி!
price increased in Toll plaza
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மட்டும் 45-க்கும் மேற்பட்டசுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும், ஏப்ரல் மாதத்திலும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்ந்தால், சரக்கு வாகனங்களின் வாடகை, தனியார் பேருந்துகளின் கட்டணம், காய்கறி விலை என மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கிவிடும்.
இந்நிலையில் கட்டண உயர்வு வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்படவுள்ளது என அறிவித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும், சுங்கச்சாவடி கட்டணங்களை ஆண்டுக்கு 2 முறையும் உயர்த்திக் கொண்டே போவதால் மக்கள் கடும் அவஸ்தை அடைந்துள்ளனர்.