தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி?.. அழைப்பு விடுத்த பாஜக.. காரணம் இதுதான்.!

#Breaking: தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி?.. அழைப்பு விடுத்த பாஜக.. காரணம் இதுதான்.!

Prime Minister Narendra Modi May Arrive Tamilnadu Oct 30 Advertisement

 

முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமரை நேரில் வர வேண்டி தமிழ்நாடு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் தமிழக அரசியல்கட்சி தலைவர்கள் பலரும் பசும்பொன்னுக்கு நேரில் சென்று வருவார்கள்.

narendra modi

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா அக். மாதம் 30-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகைதர தமிழ்நாடு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி குருபூஜைக்கு தமிழகம் வந்தால், அவ்வழியே இராமேஸ்வரம் செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமரின் தமிழக வருகை, அவரின் அலுவலகத்தால் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#narendra modi #tamilnadu #TN BJP #Muthuramalingadevar #politics #முத்துராமலிங்கத்தேவர் #நரேந்திர மோடி #தமிழகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story