தனியார் வங்கிகள் மற்றும் சிறிய நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க கூடாது என தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
Private bank do not bring any interest in peoples
கொரோனா வைரஸின் எதிரொலியால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தனியார் வங்கிகள் மற்றும் சிறிய நிதி நிறுவனங்கள் வட்டி வசூலை வசூல் செய்ய கூடாது என்ற அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 21 நாட்கள் அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்று கூறி ஊரடங்கு உத்தரவை இந்திய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் இயங்கி வரும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் தினசரி, வாரந்திர மற்றும் மாதாந்திர வட்டி வசூலை அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த உத்தரவை மீறுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.