சென்னை தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து அரங்கேறும் தற்கொலை! காரணம் என்ன?
PRIVATE COLLEGE REGULAR MEDAR
சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவன் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு, மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக், நர்சிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே மாணவ, மாணவிகள் தங்குவதற்கான விடுதிகளும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் குமாரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் I.T பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் ராகவன் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன்னதாக பயோமெடிக்கல் 3ம் ஆண்டு படித்து வந்த அனுபிரியா (21) என்ற மாணவி விடுதியின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து கடந்த மே 27-ம் தேதி காலை 10 மணியளவில் அதே விடுதியில் தங்கி, தகவல் தொழில்நுட்பம் முதலாமாண்டு படித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில் சவுத்ரி (19) வயது மாணவர் 2வது மாடியிலிருந்து கீழே குதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த சில மாதத்தில் எஸ்.ஆர்.எம். கல்லுாரியில் மாணவ, மாணவி தற்கொலை செய்துகொள்வது இது 3-வது முறை ஆகும். அடுத்தடுத்து மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.