சென்னையில் வயதான நபர்களை குறி வைத்து பாலியல் தொழில்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
சென்னையில் வயதான நபர்களை குறி வைத்து பாலியல் தொழில்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
சென்னை சென்னையில் சமீப காலமாக பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டில் வருகின்றனர். அதிலும் குறிப்பாக இளம் பெண்களை குறி வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வயதான நபர்களை குறி வைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் செல்வராணி தலைமையிலான மகளிர் போலீசார் சந்தேகத்துக்கு இடமான பகுதியின் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு வயதான நபர்கள் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக குடியிருப்பில் உள்ள வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் அர்ஜுன் குமார் என்பவர், வயதான நபர்களிடம் இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மகளிர் போலீசார் பாலியல் புரோக்கர் அர்ஜுன் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.