மக்கள் வெளியில் அலையவேண்டாம்: ரேஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருள்கள்! தமிழக அரசு அதிரடி!
Provision in ration shop
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் 6400பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று தமிழக அரசு வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை விற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதில் உளுந்து, மிளகு, சீரகம், வெந்தயம் உள்பட 19 பொருட்களை மளிகை தொகுப்பாக, ரூ.500 என்ற விலைக்கு இந்த மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.