சீனாவில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய புதுக்கோட்டை நபர் மரணம்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
Pudhukottai man died he was returned from china
சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த தமிழர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். சீனாவில் இருந்த இவர் கடந்த 4-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சக்திகுமார் கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது.
சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டபோது தான் அவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதே அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால், அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்புகிறவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் ஊர் திரும்பியவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.