திமுக - பாஜக கல்வீசி தாக்குதல்.. எதிர்ப்பு கோஷங்களால் சம்பவம்.. அறந்தாங்கியில் பரபரப்பு.!
திமுக - பாஜக கல்வீசி தாக்குதல்.. எதிர்ப்பு கோஷங்களால் சம்பவம்.. அறந்தாங்கியில் பரபரப்பு.!
அறந்தாங்கி நகருக்கு வந்த நாஞ்சில் சம்பத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்க, அவருக்கு ஆதரவளித்து வந்த திமுக என இருதரப்பு மோதிக்கொண்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள திமுக கட்சியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் வந்திருந்தார். இவர் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனை ஒருமையில் பேசி இருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அறந்தாங்கிக்கு நாஞ்சில் சம்பத் வந்த செய்தியை அறிந்த பாஜக தொண்டர்கள், அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த திமுக ஆதரவாளர்கள், விடுதிக்கு சென்று நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதனால் திமுக - பாஜக இடையே மோதல் சம்பவம் உருவான நிலையில், இருதரப்பும் வாக்குவாதம் செய்துகொண்டு திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி இருதரப்பையும் அங்கிருந்து களைந்து செல்ல வைத்தனர். இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.