பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் லஞ்சம்: நீதிமன்றத்தின் கூற்றை உறுதிப்படுத்திய பகீர் சம்பவத்தின் அதிர்ச்சி சம்பவம்.!
பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் லஞ்சம்: நீதிமன்றத்தின் கூற்றை உறுதிப்படுத்திய பகீர் சம்பவத்தின் அதிர்ச்சி சம்பவம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீமிசல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த நவ.19ம் தேதி தனது மனைவியை மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி செய்துள்ளார். மாலை 05:30 மணியளவில் அனுமதியான கர்ப்பிணிக்கு, அன்று இரவு 11 மணியளவில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கும் பணியில் அமுதா ஈடுபட்டு இருந்த நிலையில், அவர் பெண்ணின் கணவரை அழைத்து பேசியுள்ளார்.
அப்போது, தான் பிரசவத்திற்காக திருச்சியில் இருந்து ரூ.2500 மதிப்புள்ள ஊசியை வரவைக்க வேண்டும் என்பதால் பணம் வேண்டும் என கேட்க, அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பணமா? என்று விழிபிதுங்கியவாறே கையில் இருந்த ரூ.3000 பணத்தை சரவணன் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள தொகையை டிஸ்ஜார்ஜுக்கு முன்பு கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 22ம் தேதி சரவணனின் உறவினர்கள் குழந்தையை பார்க்க வந்து, அதனை கொஞ்சிக்கொண்டு இருந்தாக தெரியவருகிறது.
அச்சமயம் செவிலியர் சீருடையின்றி வருகைதந்த அமுதா, நாய்களே வெளியே செல்லுங்கள் என சரவணனின் உறவினர்களை திட்டி இருக்கிறார். மேலும், ரூ.2000 கொடுக்க வக்கில்லாத... என்று தனது வாயில் வாதத்தை சரமாரியாக பேசி, உறவினர்களில் ஒருவரை அடிக்கப்பாய்ந்து விரட்டி இருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், செவிலியர் அமுதா இதுபோன்ற பலமுறை நோயாளிகளிடம் நடந்துகொண்டதும் தெரியவந்துள்ளது. இவ்வாறான செவிலியர் எப்படி மகளிருக்கான மகப்பேறு துறையில் தற்போது வரை பணியாற்றுகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை ஒன்றின்போது, மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இலஞ்சம் தலைவிரித்தாடுவதாக, சான்றிதழ் வழங்கும் விஷயத்தில் கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால், இதுபோன்ற செயல்கள் அவற்றை ஆதாரத்துடன் உறுதி செய்கிறது.