இப்படியெல்லாமா பேனர் வைப்பீங்க.. ஒரு லெட்டர் கூட வரல.. விரக்தியில் இளைஞர் செய்த வினோத காரியம்..
அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பிளக்ஸ் வைத்த ச
அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பிளக்ஸ் வைத்த சம்பவம் வைரலாகிவருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பெரியளவில் தனது புகைப்படத்துடன் பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்தார். அந்த பேனரில், "தனது வேலைவாய்ப்பு பதிவு எண்ணை குறிப்பிட்டு, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24 ஆண்டு பதிவு மூப்பை பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. நலம் விசாரித்துக்கூட ஒரு கடிதமும் வந்ததில்லை" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, பிரபல நாளிதழ் ஒன்று அவரை பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் பேசிய ஆனந்தராஜ், "நான் படிக்கும்போதில் இருந்தே 1997-ல் எஸ்எஸ்எல்சியையும், 1999-ல் பிளஸ் 2 படிப்பையும் பதிவு செய்தேன். அதன்பிறகு ஆசிரியர் பயிற்சியை முடித்து அதையும் பதிவு செய்தேன். ஆனால் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு கடுதாசி கூட வரவில்லை.
அரசு வேலைக்கா எவ்வளவோ முயற்சித்தும் வேலை கிடைவில்லை. இதனால் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்து, அதனையும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். அதற்கும் எந்த பலனும் இல்லை. என்னை போன்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் கஷ்டப்பட்டு படிப்பது ஒரு அரசு வேலைக்காக தான்.
ஆனால் அரசு வேலை கிடைக்காததால் தற்போது குறைந்த கூலிக்கு தனியார் வாகனம் ஓட்டி, குடும்பத்தை நடத்தி வருகிறேன். வேலை கிடைக்காத விரக்தியிலும், கடும் மனஉளைச்சலிலும் தான் இப்படி பேனர் வைத்ததாக அவர் கூறியுள்ளார்.