#Breaking: ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயுக்கசிவு - தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல்; பதற்றம்.!
#Breaking: ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயுக்கசிவு - தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல்; பதற்றம்.!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் இருக்கிறது. இங்கு நாளொன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
50 பணியாளர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தில் இருந்து அனைவரும் அவசர கதியில் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 5 பேருக்கு மட்டும் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தற்காலிகமாக வாயுக்கசிவை சரி செய்துள்ளனர்.