மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்ற புதுக்கோட்டை மாணவர்கள்!
pudukottai students won state level
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டிக்கான தகுதித்தேர்வில் 300 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அருப்புக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த தனியார் ரோபோடிக் நிறுவனம் மூன்று பிரிவுகளாக நடத்திய போட்டியில், 50 அணிகள் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பங்குபெற்றனர்.
இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, மாநில அளவிலான ரோபாட்டிக் கண்காட்சியில் முதலிடம் பிடித்தனர். இந்தநிலையில் வரும் 25.11.2019 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ஆலங்குடி அரசு ண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆலங்குடி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் வெற்றிபெற்ற மாணவர்களை தேசிய அளவிலும் பரிசு பெற அப்பகுதி பொதுமக்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.