இந்திய அணியின் தலைவராக பதவியேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார் புதுக்கோட்டை இளைஞன்!
Pudukottai younster as a indian volleyball captain
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கோட்டைக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சா.ஜெரோம்வினித். இவர் பள்ளி பருவத்தில் இருந்தே கைப்பந்து போட்டியில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.
இந்தநிலையில் ஜெரோம் வினித் அவரது கடுமையான பயிற்சியாலும், சிறப்பான ஆட்டத்தாலும் தற்போது தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இந்திய கையுந்துபந்து (volleyball)அணியில் கேப்டன் ஆக தேர்வு செய்ய பட்டுள்ளார்.
ஜெரோம் வினித் நன்றாக விளையாடி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரை இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க கோட்டைக்காடு கிராம மக்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஜெரோமிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சுமக்கத் தெரிந்து கொண்டால் சுமைகளும் சுலபம் தான், சாதிக்க பழகி விட்டால் தடைகளும் சவால் தான் என ஜெரோம் வினித்தின் சாதனைகளை அப்பகுதி இளைஞர்கள் பாராட்டும் வகையில் அவரது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.