குற்றாலத்தில் குதூகலமாக குளியல் போட்ட பெண்கள், அலறியடித்து தலைதெறிக்க ஓட்டம்! நேர்ந்தது என்ன?
python entered in kutralam ladies bathing place
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் பசுமையான, அழகிய மலைகள் சூழ்ந்த அருவிகள் மற்றும் ஓடைகள்கொண்ட பகுதியாகும்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளது.
இதனால் இங்கு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில், பெண்கள் குளிக்கும் பகுதியில் ஏராளமானோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது தண்ணீருடன் சேர்ந்து 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கீழே விழுந்து அப்பகுதியில் ஊர்ந்து வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து மலைப்பாம்பை பிடித்து குற்றாலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.