குளத்தில் மீன்பிடிக்க வலைவீசியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வலையில் துள்ளிக்குதித்ததை கண்டு பீதியடைந்த ஊர்மக்கள்!
Python struggled in fish net in viruthunagar
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, முகவூரிலிருந்து சொக்கநாதன் புத்தூர் செல்லும் வழியில் தொண்டைமான் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் மீன்களை பிடிப்பதற்காக வலையை விரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் காலை வலையின் ஒரு பகுதி அறுந்து இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீன்பிடிப்பவர்கள் உடனேயே வலையை இழுத்து பார்த்துள்ளனர். அப்பொழுது வலைக்குள் 6 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று சிக்கி வெளியே செல்ல முடியாமல் திணறி வந்துள்ளது. மேலும் பாம்பின் கீழ்ப்பகுதி வலையில் சிக்கி இருந்ததால் அது தப்பிக்க முயன்றநிலையில் வலை அறுந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து வலையிலிருந்து பாம்பை பிடித்த மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள் மலைப்பாம்பை பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.
இதற்கு முன்பே கடந்த மே மாதம் 30ந் தேதி மற்றும் ஜூன் 25 மற்றும் 30 தேதிகளில் தொடர்ந்து மலைப்பாம்புகள் அந்த குளத்தில் பிடிபட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் நான்காவது முறையாக மற்றொரு மலைப்பாம்பு ஒன்று அந்த குளத்தில் பிடிபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.