மதுரை - செங்கோட்டை பயணிகள் இரயில் இயக்க அனுமதி.. விருதுநகர், தென்காசி மாவட்ட மக்களுக்கு உற்சாக செய்தி.!
மதுரை - செங்கோட்டை பயணிகள் இரயில் இயக்க அனுமதி.. விருதுநகர், தென்காசி மாவட்ட மக்களுக்கு உற்சாக செய்தி.!
மதுரையில் இருந்து விருதுநகர், இராஜபாளையம், தென்காசி வழியே செங்கோட்டைக்கு தினமும் 3 ஜோடி இரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த இரயில் மதுரையில் இருந்து காலை 7 மணிக்கும், பகல் 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் புறப்பட்டு செங்கோட்டையை சென்றடையும். இது சாதாரண பயணிகள் இரயிலாக இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் இரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கில் வந்த தளர்வுகளுக்கு பின்னர் மதுரையில் இருந்து காலை 7 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 3 மணிக்கும் என ஒரே ஒருஇரயில் விரைவு இரயில் கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்தது.
மண்டல அளவிலான பயணிகள் இரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், சில பயணிகள் இரயிலை இயக்க இரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இரயில்கள் பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, பயணிகள் இரயில் தொடர்பான 111 இரயில்கள் பட்டியலில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை - நாகர்கோவில், மதுரை - செங்கோட்டை இரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கோட்டையில் இருந்து காலை 06:30 மணிக்கு மதுரை புறப்படும் இரயில் 56735, மதுரையில் இருந்து மாலை 05:30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் 56732 இரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இரயில்கள் சேவை என்றில் இருந்து தொடங்கும்? என்ற அறிவிப்புகள் இல்லை. அதனால் விரைவில் இவை பயணிகள் இரயிலாக இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.