புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை. வானிலை ஆய்வுமையம் தகவல்.
Rain in chennai and tamilnadu updates
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 6 சென்டி மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தஞ்சை வேலூர் நீலகிரி திருவாரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒடிசா அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியினால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.