கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி! கொட்டி தீர்த்த கனமழை! விநாயகருக்கு நன்றி தெரிவித்து வழிபட்ட பொதுமக்கள்!
rain in tamilnadu
தமிழகத்தில் வெகு நாட்களாக மழை இல்லாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். சில மாவட்டங்களில் மழையே பெய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வந்தது.
தமிழகத்தில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் வெளுத்துக்கட்டிய நிலையில், சென்னையில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, கிண்டி, அடையாறு, வடழனி, கோயம்பேடு, குரோம்பேட்டை, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றயதினம் விநாயகர் சதுர்த்தியை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவந்த நிலையில் மழை பெய்ததால் விநாயகருக்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.