×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"மனமார்ந்த நன்றி.." சொன்னபடி செய்த அனைவருக்கும் ரஜினி ட்விட்டரில் நன்றி!

Rajini thanks to all in twitter

Advertisement

நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் கட்சி தொடங்கி 2021ல் தமிழகம் முழுக்க 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம். தமிழகத்தில் ஆன்மீக அரசியல் அமைப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் 2017 டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார்.

உறுதியாக அரசியலுக்கு வருவேன் என்று கூறிய ரஜினிகாந்த், தற்போது தனக்கு முதல்வர் ஆசையே இல்லை, என்னுடைய ரத்தத்திலேயே அந்த ஆசை இருந்தது கிடையாது. சட்டமன்றம் சென்று அங்கு விவாதம் செய்வது எல்லாம் எனக்கு செட்டாகாது. 

நான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன். ஆட்சிக்கு வேறு ஒரு தலைவர் இருப்பார், நல்ல முதல்வரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்ற கருத்தையும் முன்வைத்து, இதை அனைத்து மக்களுக்கும் சொல்லுங்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி." என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajini #Rajini tweet
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story