சொத்து தகராறில் அண்ணன்-தம்பிகள் மோதல்; பரபரக்க நடந்த பயங்கர சம்பவம்.!
சொத்து தகராறில் அண்ணன்-தம்பிகள் மோதல்; பரபரக்க நடந்த பயங்கர சம்பவம்.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் துரைசிங்கம். இவரது அண்ணன் ரத்தினசாமி. இருவருக்கும் திருமணமாகி மனைவி பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
துரைசிங்கம் குடும்பத்தினருக்கு சொந்தமான பூர்வீக நிலம் கிராமத்தில் உள்ளது. அதில் துரைசிங்கம் பட்டா பதிவு செய்து தனதாக்கியதாக தெரியவருகிறது. இது அண்ணன் ரத்தினசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் பிரச்சினை ஏற்படவே, துரைசிங்கம் தனது வீட்டின் பின்புறத்தில சீட் போட்டு அவ்வப்போது ஓய்வெடுத்து வந்துள்ளார்.
மழை நேரத்தில் கூரையிலிருந்து வடியும் நீர், அண்ணன் ரத்தினசாமி வீட்டின் மேல் தளத்தில் விழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது வீட்டின் மீது ஏறி கூரையை சேதப்படுத்தி உள்ளார்.
இது துரை சிங்கத்திற்கு கோபத்தை ஏற்படுத்த, அவர் ரத்தினசாமியை கீழே தள்ளி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. சொத்து தகராறில் அண்ணன்-தம்பிகள் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.