இராஜராஜ சோழன் காலத்தில் இருந்த ஈழக்காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவி.!
இராஜராஜ சோழன் காலத்தில் இருந்த ஈழக்காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவி.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பழைய காசுகள், பானை ஓடு அடையாளம், கல்வெட்டுகளை படித்தல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மாணவர்கள் தங்களின் பகுதியில் உள்ள பழங்கால பொருட்களை விடுமுறை நாட்களில் ஆர்வத்துடன் தேடி கண்டறிந்து வருகின்றனர். சில மாதத்திற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் சீனப்பானையை கண்டறிந்தனர்.
இந்த நிலையில், பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த திருப்புல்லாணி பகுதியை சார்ந்த மாணவி முனீஸ்வரி, முதலாம் இராஜஇராஜ சோழனின் பெயர்பொறித்த 2 ஈழக்காசுகளை கோரைக்குட்டம் ஊரில் கண்டெடுத்து இருக்கின்றனர்.
இந்த ஈழக்காசுகள் முதலாம் இராஜஇராஜ சோழனின் காலமும் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. இலங்கையை போர் மூலம் வெற்றெடுத்த முதலாம் இராஜஇராஜ சோழனின் பெருமையை போற்ற நாணயம் வெளியிடப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.