சென்னையில் பரபரப்பு.... கத்தி முனையில் கடத்தல்... இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரபல பாடகர்.! பின்னணி என்ன.?
சென்னையில் பரபரப்பு.... கத்தி முனையில் கடத்தல்... இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரபல பாடகர்.! பின்னணி என்ன.?
உலக இசை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மதுரையைச் சார்ந்த பிரபல ராப் இசை பாடகர் ஆன தேவ் ஆனந்த் என்பவர் கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த பிரபலமான ராப் இசை பாடகர் தேவ் ஆனந்த். இவர் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார்ட்டி அரங்கில் நடைபெற்ற உலக இசை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது நண்பர்களான கெவின், கிளப்பன், கிரிஷ் மற்றும் முகமது இப்ராகிம் ஆகியோருடன் தனது காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.
இவர்களது கார் திருவேற்காடு அருகே மதுரவாயல் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பைக் இவரது காரை உரசி சென்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காரை நிறுத்தி காரில் ஏதேனும் சேதமாகியிருக்கிறதா? என இவர்கள் சோதனையிட்டு உள்ளனர். அப்போது அங்கு வந்த காரிலிருந்த 10 பேர் கொண்ட கும்பல் பாடகர் தேவ ஆனந்தை கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களித்த புகாரியின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேவ் ஆனந்தை தீவிரமாக தேடி வருகின்றனர். தேவ் ஆனந்தின் சகோதரர் வாங்கிய 2.5 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் பாடகர் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.