"இப்பெல்லாம் எலி கஞ்சா சாப்பிடுதா.?" விடுதலையான கஞ்சா வியாபாரிகள்... நீதிமன்றத்தில் அதிர்ச்சி.!
இப்பெல்லாம் எலி கஞ்சா சாப்பிடுதா.? விடுதலையான கஞ்சா வியாபாரிகள்... நீதிமன்றத்தில் அதிர்ச்சி.!
சென்னையில் கஞ்சா கடத்தல் வழக்கில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதால் இரண்டு கஞ்சா வியாபாரிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மாட்டான்குப்பம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் நீதிபதி என் முன் விசாரணைக்கு வரும்போது 11 கிலோ கஞ்சா மட்டுமே இருந்தது இது தொடர்பாக நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த காவல்துறையினர் ஒன்பது கிலோ கஞ்சாவை இனி சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி காவல்துறையினரால் குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனக்கூறி இரண்டு கஞ்சா வியாபாரிகளையும் விடுதலை செய்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.