அடுத்த மாதம் ரேஷன் கடைகளில் பொருட்கள் எப்படி வாங்க வேண்டும்?
Ration card
கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் நோய் தடுப்பு பணிக்கு ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து, ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங் கப்படும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அவர்களுக்கும் உரிய ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும். பொது வினியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.