சரக்கடிக்க வெளியே போறீங்களா?. அப்போ இது உங்களுக்குத்தான்.! உஷாரா இருங்க.!!
சரக்கடிக்க வெளியே போறீங்களா?. அப்போ இது உங்களுக்குத்தான்.! உஷாரா இருங்க.!!
ரியல் எஸ்டேட் அதிபரை, அவரது நண்பரே கத்தியால் கழுத்தில் குத்திகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், குமரேசன் நேற்று அவரது நண்பருடன் டாஸ்மாக் மதுபான கடையில் இரவு 10 மணி வரை மது அருந்தியுள்ளார்.
இதன்பின் அவரது நண்பருடன் வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது, இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு கைகலப்பாக மாறவே ஆவேசமடைந்த குமரேசனின் நண்பர், அவரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதனைக்கண்ட மதுபான கடையில் வேலை செய்தவர்கள், அவரை உடனடியாக மீட்டு 108 மருத்துவ உறுதியின் மூலமாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்த நிலையில், நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக குமரேசனின் நண்பரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தொழில் போட்டியின் காரணமாக குமரேசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? மது பிரிப்பதில் ஏதேனும் பிரச்சனை வந்ததா? என்றும் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.