என்னது.. கனமழை இல்லையா..! ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறதா..! பின்வாங்கிய வானிலை ஆய்வு மையம்
red alert released for 5 districts
தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி முதல் மிகவும் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் இதனை எச்சரிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் தமிழகம் முழுவதும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தில் இந்த அறிக்கையால் பலர் தங்களுடைய வேலைகளை தள்ளி வைத்துள்ளனர். சில தனியார் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் எந்தவித முக்கியமான பணிகளும் இல்லாத வண்ணம் தங்களை தயார்படுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால் இன்று சென்னையில் அதிகாலையில் சிறிது நேரம் மட்டுமே தூறல் இருந்தது. அதன்பின் மேகங்கள் கலைந்து வழக்கம் போல சுட்டெரிக்கும் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு கடுமையான வளிமண்டல மேல் அடுக்கு சுழற்ச்சி உருவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கோவை, விருதுநகர், நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கான மிக கனமழை வாய்ப்பு இல்லை எனவும், இந்த மாவட்டங்களு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.