கார் மீது லாரி மோதி கோர விபத்து... 2 வாலிபர்கள் பலி... தேனி அருகே பரபரப்பு!!
கார் மீது லாரி மோதி கோர விபத்து... 2 வாலிபர்கள் பலி... தேனி அருகே பரபரப்பு!!
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது23). இவர் இன்று காலை தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தனது காரில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மதுராபுரி அருகே வந்த போது எதிரே தர்மபுரியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற சரக்கு லாரி கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
அதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் காரில் பயணம் செய்த ஆனந்த் மற்றும் அவரது நண்பர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொரு நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 2 வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.