அணைப்பதி அருகே காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதல்... வாலிபர் பலி!!
அணைப்பதி அருகே காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதல்... வாலிபர் பலி!!
திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த சுப்ரமணி என்பவர் காரில் நம்பியூரிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே பெருமாநல்லூரை அடுத்த தட்டான்குட்டையை சேர்ந்தவர்கள் கோகுலபிரசாத் (வயது20), குமார் (25), சாரதி (27) ஆகிய மூவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது அணைப்பதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மூன்று பேர் வந்த மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோகுலபிரசாத் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
பின்னால் உட்கார்ந்திருந்த சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த குமார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.