தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரோகினி தியேட்டர் தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரம் அழுகிய ஆணின் சடலம்.. அதிர்ந்துபோன திரையரங்கு நிர்வாகம், ரசிகர்கள்.!

ரோகினி தியேட்டர் தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரம் அழுகிய ஆணின் சடலம்.. அதிர்ந்துபோன திரையரங்கு நிர்வாகம், ரசிகர்கள்.!

Rohini Theater Worker Body Recovered form Campus Advertisement

 

கோயம்பேடு ரோஹிணி தியேட்டர் பணியாளர், அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சென்னை கோயம்பேட்டில் புகழ்பெற்ற ரோஹிணி திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் வாரம் ஒருமுறை லாரிகள் வைத்து தண்ணீரை நிரப்பும் பணி நடைபெறும். 

இந்த நிலையில், சம்பவத்தன்று ஊழியர்கள் தண்ணீரை நிரப்ப தொட்டியை திறந்தபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

Rohini theater

அப்போது, தண்ணீர் தொட்டிக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் திரையரங்கில் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வந்த வேங்கடேச பெருமாள் என்பது உறுதியானது. அவர் ஜனவரி 26ல் மதுபோதையில் வேலைக்கு வந்துள்ளார் என நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனால் வேங்கடேச பெருமாள் போதையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? அவர் போதையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருந்தால், அது தெரியாமல் தொட்டியை மூடியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 

ஒரு வாரமாக தண்ணீர் தொட்டிக்குள் இருந்த வேங்கடேச பெருமாளின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த தகவல் திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Note: Title & Inside Image File Picture

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rohini theater #tamilnadu #koyambedu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story