ரவுடி பேபி சூர்யா, சிக்காவின் யூடியூப் சேனல்கள் முடக்கம்.? போலீசார் தகவல்.!
ரவுடி பேபி சூர்யா, சிக்காவின் யூடியூப் சேனல்கள் முடக்கம்.? போலீசார் தகவல்.!
மதுரையைச் சேர்ந்தவர் சூர்யா.35 வயது நிரம்பிய இவர் டிக்டாக் செயலியில் ரவுடி பேபி என்ற பெயரில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். இவர் அடிக்கடி ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டதன் மூலம் ரவுடி பேபி சூர்யாவைச் சுற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்துவரும். சமீபத்தில் மற்றொரு பிரபலத்தை பாலியல் தொழிலுக்கு அழைத்தது தொடர்பான ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரவுடி பேபி சூர்யா, தன்னை விட வயது அதிகமான சிக்கா எனும் சிக்கந்தருடன் சேர்ந்து ஆபாசமாக பேசும் வீடியோவை பதிவிடுவது. லைவ் வீடியோவில் இருவரும் சேர்ந்து அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை வெளியிடுவார்கள். இதனையடுத்து இவர்களை கைது செய்யுமாறு பலரும் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் யூடியூப்பில் பதிவு செய்து வருவதாகவும், இதுசமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்கள் இருவரும் நடத்தி வரும் surya media மற்றும் singer sikka official ஆகிய யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.