சென்னை: ரௌடி குணா காவல்துறையினரால் அதிரடி கைது.! விபரம் உள்ளே.!
சென்னை: ரௌடி குணா காவல்துறையினரால் அதிரடி கைது.! விபரம் உள்ளே.!

ரௌடி படைப்பை குணா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
'
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படைப்பை பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவர் உள்ளூரில் ரௌடியாக இருந்து வந்த நிலையில், பின்னாளில் படைப்பை குணவாக அறியப்பட்டார். மேலும், சென்னையில் முக்கிய தலைகள் எல்லாம் அடுத்தடுத்து காலியாக, ஒருகட்டத்தில் ஜி-பிரதர்ஸ் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
குணாவின் செயல்பாடுகளை கண்காணித்து, அவர் தொடர்புடைய குற்ற வழக்குகளில் கைது செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே, இன்று சுங்குவார்சத்திரம் பகுதியில் படைப்பை குணா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கார் - கண்டைனர் லாரி மோதி சோகம்; 2 கல்லூரி மாணவர்கள் பலி.!
மீண்டும் கைது
அங்குள்ள மதுரமங்கலம் பகுதியில், நீர் பாய்ச்சுதலில் ஏற்பட்ட பிரச்சனையில், மோகனின் என்பவரை மிரட்டி கொலை செய்ய முயற்சித்ததாக குணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக குணா மீது கொலை, கொலை வழக்கு, கடத்தல் என 40 வழக்குகள் இருக்கின்றன.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வழக்கில் கைதாகி பிணையில் வந்த குணா, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கு பின்னர் குணா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கண்டைனர் லாரி சக்கரத்தில் சிக்கி நேர்ந்த சோகம்; இளைஞர் தலை நசுங்கி மரணம்.!