1 கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை தொடர்ந்த வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Rs 1 crore compensation for subasri death
சென்னையில் பேனர் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீ சம்பவத்தில் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சாலையில், அதிமுக பிரமுகர் வீட்டு திருமணத்திற்காக சாலையில் வைத்திருந்த வரவேற்பு பேனர் சரிந்து விழுந்ததில் மென்பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சுபஸ்ரீ தந்தை ரவி ரூ. 1கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், பள்ளிக்கரணையில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சுபஸ்ரீ தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க நீதிபதிகள் அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், பேனர் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.