பாத்ரூமில் கேமரா ஃபிட் செய்த பெயிண்டர்.... திடுக்கிட்டு அலறிய சிறுமி... காவல்துறையின் நடவடிக்கை.!
பாத்ரூமில் கேமரா ஃபிட் செய்த பெயிண்டர்.... திடுக்கிட்டு அலறிய சிறுமி... காவல்துறையின் நடவடிக்கை.!
சேலம் மாவட்டத்தில் பெயிண்ட் அடிக்க வந்த தொழிலாளி கழிவறையில் செல்போனை வைத்து படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சேலம் அழகாபுரம் குட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவர் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெயிண்ட் அடிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது கீழ் வீட்டில் இருக்கும் கழிவறையில் தனது செல்போனை பொருத்தி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிவறைக்கு வந்த போது செல்போன் கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கூச்சலிட்டு அவர் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். இதனை அறிந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மணிகண்டனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.