தொழிலதிபர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; தந்தையை சரமாரியாக தாக்கிய மகன்.!
தொழிலதிபர் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; தந்தையை சரமாரியாக தாக்கிய மகன்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர். பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா சேகோ தொழிற்சாலையின் உரிமையாளர் குழந்தை வேலு. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் குழந்தை வேலுவை, அவரின் மகன் வினோத் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. இதுகுறித்து விசாரிக்கையில், ஆத்தூர் அமிர்தா தொழிற்சாலையை நிர்வாகம் பார்த்து வந்த வினோத் கடன் வாங்கி இருக்கிறார்.
கடன் கடுமையாக அதிகரித்து ஊழியர்களின் சம்பளம் நிலுவைப்பட, கடனை அடைக்க தந்தையின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையில் தலையிட முயற்சித்துள்ளார். இதனால் தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடு, சொத்து பிரச்சனை நிலவியுள்ளது.
பிப்ரவரி 16 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து வினோத் தந்தையை கடுமையாக தாக்கி இருக்கிறார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பிய இரண்டு நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். மகனின் மீது காவல் நிலையத்தில் அன்று புகார் அளிக்காத காரணத்தால் கைது ஏதும் செய்யப்படவில்லை.
தற்போது வீடியோ வெளியானதால் 5 பிரிவுகளில் வினோத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.