செல்போனில் ஆதாரங்களை அழித்துவிட்டு தூக்கில் தொங்கிய ஊர்க்காவல் படை வீரர்.. காரணம் என்ன?.. சேலத்தில் சோகம்.!
செல்போனில் ஆதாரங்களை அழித்துவிட்டு தூக்கில் தொங்கிய ஊர்க்காவல் படை வீரர்.. காரணம் என்ன?.. சேலத்தில் சோகம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கொத்தம்பாடி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரின் மகன் ஹரிபாபு (வயது 28).
பி.எஸ்.சி பயோடெக் பயின்று முடித்துள்ள இவர், ஆத்தூர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு நேரத்தில் வீட்டில் சாப்பிட்டு உறங்கியுள்ளார்.
இந்நிலையில், அதிகாலை 5 மணிக்கு ஹரிபாபுவின் தந்தை முருகேசன் எழுந்து பார்த்தபோது, மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின், சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஹரிபாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஹரிபாபு தனது செல்போனில் இருந்த நம்பர்களை அழித்து பின் தற்கொலை செய்தது உறுதியானது. இதனால் அவர் காதல் பிரச்சனையில் தற்கொலை செய்தாரா? வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.