ஓடும் பேருந்துக்குள் சிறுமியிடம் அத்துமீறிய காதலன்.. சென்னை-சேலம் பேருந்தில் பகீர்.. முகநூல் காதல் கபளீகரம்.!!
ஓடும் பேருந்துக்குள் காதல் பெயரில் பயங்கரம்.. சென்னை - சேலம் சொகுசு பேருந்தில் சிறுமி பலாத்காரம்.. போக்ஸோவில் கைதான காதலன்..!!
சிறுமியை முகநூலில் காதல் வலையில் வீழ்த்திய இளைஞன், திருமணம் செய்ய முயற்சித்து சட்டம் தடுத்ததால் பேருந்து பயணத்தில் காதல் பெயரில் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் முகநூல் உபயோகம் செய்யும் பழக்கத்தை வைத்திருந்த நிலையில், அதன் வாயிலாக தினேஷ் குமார் (வயது 24) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை நேரில் சந்தித்து பேசிய தினேஷ் குமார், நான் உங்களை காதலிக்கிறேன், திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமார் மற்றும் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சிறுமியை அதிகாரிகள் மீட்டு விசாரணை செய்தனர். அப்போது, காதலன் தினேஷ் குமார் சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வண்டலூரில் நண்பர்களின் உதவியோடு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
அந்த சமயத்தில் சிறுமிக்கு 17 வயது ஆகிறது என்ற விஷயம் தெரியவரவே, அவர்கள் திருமணம் செய்ய உதவ இயலாது என்று மறுத்துள்ளனர். இதனால் சிறுமியை மீண்டும் சேலத்தில் கொண்டு சென்று விட திட்டமிட்ட தினேஷ் குமார், சென்னை - சேலம் சொகுசு பேருந்தில் சிலீப்பர் கோச்சில் சேலம் நோக்கி பயணித்துள்ளனர்.
அப்போது, நள்ளிரவு நேரத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்றுள்ளன. இதனை தனக்கு சாதகமாக்கிய தினேஷ் குமார், படுக்கையின் திரைகளை மூடிவிட்டு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், வீட்டிற்கு கொண்டு சென்று சிறுமியை விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் தினேஷ் குமாரை தேடி வந்த நிலையில், இன்று வளையமாதேவி பேருந்து நிறுத்தத்தில் இருந்தவரை அதிரடியாக கைது செய்தனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த அதிகாரிகள், தினேஷ் குமாரை நீதிபதிமுன் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.