காவல் நிலையத்திற்கு முன் பெண் செய்த சர்ச்சை செயல்... என்ன நடந்தது தெரியுமா?..!
காவல் நிலையத்திற்கு முன் பெண் செய்த சர்ச்சை செயல்... என்ன நடந்தது தெரியுமா?..!
எடப்பாடி காவல் நிலையம் முன்பு பெண்ணொருவர் 2 மணிநேரம் குத்தாட்டம் போட்ட சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி காவல் நிலையம், ஜலகண்டபுரம் சாலையில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு நேற்று 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி வந்து, புகார் அளிக்க வந்த நபர்களுடன் அமைதியாக நின்றுகொண்டு இருந்தார். புகாரளிக்க வந்த நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், பெண்ணை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி திடீரென காவல் நிலையத்தின் வாயிலில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆட தொடங்கினார். புகார் அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், சிலர் பெண்ணிடம் இது காவல் நிலையம், இங்கு நடனம் ஆட கூடாது என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதனை கேட்காத பெண்மணி, "ஆட்டம் பிடிச்சிருந்தா ஓரமா நின்னு பாரு, இல்லனா போயிகிட்டே இரு" என்று தெரிவித்தார். சுமார் 2 மணிநேரம் பாடல் பாடி ஆட்டம் ஆடிக்கொண்டே இருந்தார். இந்த கூத்துக்களை பொதுமக்களும், காவல் துறையினரும் கண்டும் காணாமல் இருந்த நிலையில், 2 மணிநேர ஆட்டத்திற்கு பின்னர் உடலில் களைப்பு ஏற்பட்டதால் பெண்மணி புறப்பட்டு சென்றார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் அதிகாரிகளிடம் கேட்கையில், "சம்பந்தப்பட்ட பெண்மணி எடப்பாடி நகராட்சி, கவுண்டம்பட்டி பகுதியை சார்ந்தவர். அடிக்கடி பல்வேறு பிரச்சனைகளை கூறி காவல் நிலையத்தில் புகார் அளிப்பார். நேரில் சென்று விசாரித்தால் அப்படியொரு பிரச்சனையே இருக்காது. வீண் புகார்களும் அளிப்பார். அவரை பற்றி தெரிந்துதான் அவரை கண்டுகொள்ளாமல் இருந்தோம்" என்று தெரிவித்தனர்.