4 வருசமா... நீங்கல்லாம் மனுஷங்களாடா?.. மாணவி தற்கொலை முயற்சி வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்.!
4 வருசமா... நீங்கல்லாம் மனுஷங்களாடா?.. மாணவி தற்கொலை முயற்சி வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்.!
கைகளை பிளேடால் அறுத்து, தூக்கிட்டு மாணவி தற்கொலைக்கு முயற்சித்த வழக்கில், கராத்தே மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி கடந்த 22 ஆம் தேதி வீட்டில் பிளேடால் கையை அறுத்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். இவரை மீட்டு மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதி செய்தனர்.
மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணத்தை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்த நிலையில், அவருக்கு ஆலோசனைகள் கூறப்பட்டு இருந்தது. இதன்பின்னர், மாணவி தற்கொலைக்கான அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பள்ளியில் கடந்த 4 வருடமாக பயின்று வரும் மாணவிக்கு, பள்ளியில் கராத்தே மாஸ்டராக பணியாற்றி வரும் ஆத்தூர் சீலியம்பட்டியை சார்ந்த ராஜா (வயது 46) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி 8 ஆம் வகுப்பு படிக்கும் நேரத்தில் இருந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
முதலில் மாணவி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நியூலையில், அத்துமீறல் தொடர்ந்த காரணத்தால் அன்றைய பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் சிறுமி புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து ஸ்டீபன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்துபோன மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த தகவல் உள்ளூர் மக்களுக்கு தெரியவரவே, ஊர் மக்கள் கராத்தே மாஸ்டர் ராஜாவை பிடித்து அடித்து நொறுக்கி கருமந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மாணவியின் புகாரின் பேரில் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜா மற்றும் ஸ்டீபன் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.