காது குத்துவதற்குள் கணவன் - மனைவிக்குள் கலவரம்.. பெண்ணின் விபரீத முடிவால் கதறும் பிஞ்சுகள், கணவன்.!
காது குத்துவதற்குள் கணவன் - மனைவிக்குள் கலவரம்.. பெண்ணின் விபரீத முடிவால் கதறும் பிஞ்சுகள், கணவன்.!
தம்பதி காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், பிள்ளைகளின் காது குத்தும் நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு பணம் ஏற்பு விவகாரத்தில் நடந்த பிரச்சனையில், மனமுடைந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி, வேம்படிதாளம் கிராமத்தில் வசித்து வருபவர் அரவிந்த் குமார் (வயது 35). இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். அரவிந்த் குமாரின் மனைவி மோனிஷா. தம்பதிகள் இருவரும் கடந்த 6 வருடத்திற்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் மற்றும் 9 மாதமேயாகும் மகன் ஆகியோர் பிள்ளைகளாக உள்ளனர். குழந்தைகள் இருவருக்கும் மார்ச் 25 ஆம் தேதி மொட்டையடித்து, காது குத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பணம் செலவு செய்வது தொடர்பாக கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு குடும்பத்தினர் சாப்பிட்டு உறங்கியுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் குழந்தை எழுந்து அழுதுகொண்டு இருந்துள்ளது.
அப்போது, அரவிந்த் குமார் கண்திறந்து பார்த்தபோது, மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த், கொண்டலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மோனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.