நடு ரோட்டில் தீ பிடித்து எறிந்த பேருந்து..! வெடித்து சிதறிய கண்ணாடிகள்..! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்.!
Salem private bus fire on mid road
சேலம் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று திடீரென தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் வேம்படிதளத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
பேருந்து கந்தம்பட்டி என்னும் இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகியுள்ளது. பேருந்தில் இருந்து புகை வெளியேறுவதை பார்த்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு பயணிகளை வேகமாக கீழே இறங்கச் சொல்லி உஷார் படுத்தினார்.
பயணிகள் இறங்கிக்கொண்டிருக்கையில் தீ வேகமாக பரவி பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதற தொடங்கியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.