தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சலூன் கடைக்காரர் மர்ம மரணம்!, நடுத்தெருவில் கிடந்த பிணம்: தீவிர விசாரணையில் போலீசார்..!

சலூன் கடைக்காரர் மர்ம மரணம்!, நடுத்தெருவில் கிடந்த பிணம்: தீவிர விசாரணையில் போலீசார்..!

Saloon Shopkeeper Mysterious Death Body Lying in the Middle of the Street Advertisement

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகேயுள்ள சாம்ராஜ் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவா (40). இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியில் சென்ற சிவா, வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் சிவா கிடைக்கவில்லை.  இதன் காரணமாக சிவா காணாமல் போனது குறித்து அவரது மனைவி மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மேச்சேரி அருகிலுள்ள அழகாகவுண்டனூர் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையின் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து சடலமாக கிடப்பதாக மேச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய மேச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உயிரிழந்தவர் சிவா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல்துறையினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காணமல் போனதாக பதிவான வழக்கை மர்ம மரணம் என்று பதிவு செய்ததுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற சிவா அவரது நண்பர்களுடன் சேர்ந்து அழகாகவுண்டனூர் டாஸ்மாக்கில் மது அருந்தியது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரது நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #Mecheri #death #Barber Death #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story