ஜனவரி 24 இந்த கடைகள் அடைப்பு.. தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு.!
ஜனவரி 24 இந்த கடைகள் அடைப்பு.. தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு.!

வரும் ஜனவரி 24ஆம் தேதி தமிழகத்தில் சலூன் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழக மருத்துவ சமூக நல சங்கத்தினர் இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த அறிவிப்பின்படி, "வரும் ஜனவரி 24ல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சலூன் கடைகளும் மூடப்படுகின்றன. முகம் சவரம் செய்தல், முடி திருத்துதல் உள்ளிட்ட சேவைகள் அன்றைய தினம் வழங்கப்பட மாட்டாது.
அன்றைய நாளில் கல்வி, வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரான மு க ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, சலூன் கடைகள் எதுவும் அன்றைய தினத்தில் செயல்படாது." என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை: மாடிச்சுவரில் அமர்ந்து போன் பேசியதால் விபரீதம்; 24 வயது இளைஞர் தவறி விழுந்து பலி.!
இதையும் படிங்க: #BigBreaking: ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சக்கட்டம்.. ரூ.60,200/-க்கு விற்பனை.! நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.!