குப்பையில் கிடைத்த 9 சவரன் தங்கம்.. துப்புரவு பணியாளர் நெகழ்ச்சி செயல்..!
குப்பையில் கிடைத்த 9 சவரன் தங்கம்.. துப்புரவு பணியாளர் நெகழ்ச்சி செயல்..!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புழல் 36-வது வார்டு காஞ்சி நகர் பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் சஞ்சீவ்குமார். இவர் சம்பவத்தன்று வழக்கம்போல தனது துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, குப்பைகளில் கொட்டப்பட்ட 9 சவரன் தங்க நகை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, சஞ்சீவ்குமார் அந்த தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி தனது உயர் அதிகாரிகளும் தகவல் தெரிவித்துள்ளார்.
தங்க நகை யாருடையதாக இருக்கும் என அதிகாரிகள் விசாரிக்க தொடங்கிய நிலையில், நகை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது.
துப்புரவு பணியாளர் சஞ்சீவ குமார் சீனிவாசனிடம் அவரது நகையை ஒப்படைத்தார். நேர்மையான முறையில் செயலாற்றி தங்க நகையை ஒப்படைத்த துப்புரவு பணியாளர் சஞ்ஜீவ் குமாருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.