திருமனமான 12 நாட்களிலேயே புதுமணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! பழைய காதலன் தான் இதற்கு காரணமா!
Santhiya
சென்னையை அடுத்த சென்னீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அவர் சில நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 14 ஆம் தேதி சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் இரவு ரமேஷ் வீட்டிலிருந்து வெளியே சென்ற சமயத்தில் அவரது மனைவி சந்தியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த ரமேஷ் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை அடுத்து போலீசார் தகவல் தெரிவிக்கவே போலீசார் வந்த சந்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அதனை அடுத்து விசாரணையில் ஈடுப்பட்ட போலீசாருக்கு சந்தியா திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவரை காதலித்துள்ளார் என்றும், அப்போது காதலனுடன் எடுத்து புகைப்படம் மற்றும் வீடியோ வைத்து காதலன் மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. அதனால் தான் சந்தியா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற உண்மை வெளிவந்துள்ளது. தற்போது போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.