புதுக்கோட்டையில் தனது வீட்டில் 800 லிட்டர் சாராய ஊறல் போட்ட நபர்.! போலீசார் அதிரடி நடவடிக்கை.!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 10-ந்தேதி முதல
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளதை பயன்படுத்திக்கொண்டு தற்போது கள்ளச்சந்தையில் பல இடங்களில் மது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
மேலும் பல பகுதிகளில் சாராய ஊறல் போட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்து அழித்துவருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வடக்கு வாணக்கன் காட்டை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் தனது வீட்டில் சுமார் 800 லிட்டர் சாராய ஊறல் போட்டு வைத்திருந்துள்ளார்.
இதனையடுத்து வடகாடு காவல் ஆய்வாளர் திரு பழனிச்சாமி, உதவி ஆய்வாளர் திரு மருதமுத்து மற்றும் காவலர்கள் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது சந்திரமோகன் வீட்டில் பேரல்களில் இருந்த சுமார் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் காய்ச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதனையடுத்து சாராய ஊறல் போட்ட சந்திரமோகனை போலீசார் கைது செய்தனர்.