அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா சற்று முன்பு வெளியிட்ட அறிக்கை.! கதிகலங்கிய எடப்பாடி டீம்.!
அதிமுக செயலாளராக சசிகலா சற்று முன்பு வெளியிட்ட அறிக்கை.! கதிகலங்கிய எடப்பாடி டீம்.!
அதிமுக செயலாளராக சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார்.
அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சசிகலாவை ஏற்காத காரணத்தால் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் சசிகலா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இதனையடுத்து நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதனையடுத்து சமீப காலமாக அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்தநிலையில், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழகத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அ.தி.மு.க. தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக தீபாவாளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளித் திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் தடுப்பூசியையும் தவறாமல் செலுத்திக் கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம்.
இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதியும் அன்பும் தழைக்கட்டும், வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சசிகலா இப்படி திடீரென்று அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவித்திருப்பது, அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.