சசிகலா பேசுவதைக் கேட்டு உச்சகட்ட மகிழ்ச்சியில் கை தட்டி சிரித்த எடப்பாடி! எப்போது தெரியுமா.? வைரல் வீடியோ.!
சசிகலா பேசுவதைக் கேட்டு, எடப்பாடி பழனிச்சாமி கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதலமைச்சராக, பதவியிலிருக்கும் போது, 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அதற்குப் பின்னர், 29 டிசம்பர் 2016 அன்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அ.தி.மு.க. கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்தது. ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால், அ.தி.மு.க.வில் இருந்து, ஓ.பிஎ.ஸ். ஆதரவாளர்கள் அனைவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.
பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால், அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி, எடப்பாடி பழனிசாமி அவர்களை சட்டமன்றக் குழுத்தலைவராகவும், டி.டி.வி. தினகரனை, துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்தார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து சிறையிலிருந்த சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள், கட்சியின் அவசர பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா நேற்றுமுன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இது தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அதிமுக-வை சேர்ந்த சில சசிகலா பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு சசிகலா பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. அதில், சசிகலா பேசுவதைக் கேட்டு, தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கைதட்டி, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.